Saturday, August 20, 2011

தமிழ் இன உணர்வும்......இரத்தம் குடிக்கும் சென்நாய்களும்

பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு ஊர்ஜிதம்...அரசியல் போராட்டம். ஒரு தமிழனாய் ஒரு தமிழன் தண்டிக்கபடுவதை விரும்பாத அதே வேலையில் நம் மனதில் சில நினைவுகள் போராடுவது சரியா என மனசாட்சி வாட்டுகிறது......


ஆம் இன்று பேரறிவாளன் தாய் விடும் கண்ணீரை எண்ணி மனம் வருந்தும் வேளையில் ராஜீவுடன் அன்று மரணித்த 18 தமிழ் உயிர்களை உறவுகளின் தாயார் கண்ணீரை ஏன் நம்மால் என்றும் நினைக்க முடியவில்லை..? அவர்களை பெற்றவர்களும் தாய் தானே...அவர்களை கொன்றதும் தமிழ் இனம் தானே...? மறுக்க முடியுமா ?
இதோ விடை வெகு நீளமாக.....ஆம் அன்று பேரறிவாளன் அவர்களுக்கு வயது 19 பாட்டரி வாங்கி கொடுக்கும் போது அவர் மனதில் உயிர்களை காவு வாங்க வெறியேற்ற பட்ட பொழுது. அது அரசியல் சூழ்ச்சி  அதே வெறியை இன்று சீமான் போன்றோர் எண்ணற்ற தமிழ் இளைஞர்களின் மனிதில் ஏற்றுகின்றனர்...ஆம் இந்திய நமது நாடு அல்ல....இந்திய அரசாங்கம் தமிழ் விரோத அரசாங்கம் என்று....அப்படியானால் இந்திய அரசாங்கம் தமிழகத்திற்கு இவ்வாண்டு வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியது ஏன்? ஆம் ஒரு பேரறிவாளனின் தாய் படும் துயர் நெஞ்சை வருடும் போது எண்ணற்ற பேரறிவாளன்கலை உருவாக்க துடிக்கும் இந்த அரசியல் சூழ்ச்சியர்களை இளைஞர் சமூகம் புறந்தள்ளி முன்னேற்ற பாதை நோக்கி செல்ல மனம் வேண்டுகிறது.


ஈழ விடுதலை போரில் ஒன்றும் செய்யாமல் இன்று தடி எடுத்தவன் தண்டல்காரன் போல் செயல்படுவது வேதனையுளும் வேதனை ஆம் சீமான், வைகோ , அய்யா பழ நெடுமாறன் போன்றோர் இன உணர்வை வெளிபடுத்த ஏன் அன்று இன உணர்வாளர்களை  திரட்டி கடல் மார்கமாக ஈழம் நோக்கி சென்று போர்களத்தில் சிங்களவனை எதிர்த்து போரிடவில்லை அப்படி அவர்கள் சென்றிருந்தால் உண்மை இன உணர்வின் பலன் என்ன என்பதை உலகம் அறிந்திருக்கும் அது தான் இன போர். அவர்கள் யாரும் அவ்வாறு செல்லவில்லை ஏன் என்றால் சுயநலம்..தான் எனது என்ற மனம்.....புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கள் மூலைகளை பிற நாட்டு குடிஉரிமை பெற குறுக்கு வழியில் செலவிட்டதை இனத்திற்காக செயல் படுத்தி இருந்தால் ஈழம் மலர்ந்திருக்கும். இது கடுகு அளவு இன்னும் பல கூற்றுகள் உள்ளன. இவர்கள் தங்கள் சுயநல அரசியல் புரிந்ததால் இழப்பு ஒன்றரை லட்சம் என் இனத்தவர்களை சிங்களவன் சூறையாடினான். இன்று புயல் ஓய்ந்தவுடன்     காளான் போன்ற தலைவர்கள் என கூறிகொள்ளும் இவர்கள் சமூக சீரளிவிற்காக எடுத்துள்ள ஆயுதம் இன்றைய இளைய சமூகத்தை பாழ்ஆக்குவது இன உணர்வு என்ற பெயரால்.இதற்க்கு அவர்கள் செய்வது பழுத்த மரத்தில் கல் எறிவது போன்று திமுக மற்றும் தமிழ் இன மூத்த தலைவர் கலைஞர் மீது குறை, பழி சுமித்தி அரசியல் வாழ்வு தேடுவது, தங்கள் தவறை மறைக்க கூறும் நாடகம் இது.  அன்று
1991 ஆம் ஆண்டு ஆட்சி கலைகபட்டதும் ஏன் இந்த இன உணர்வாளர்கள் அவரை மீண்டும் ஆட்சியில் அமர்த்தவில்லை அன்று எங்கே போனது இந்த வெறி...இன்று எதிர்ப்பதும் இன உணர்வு என்ற கோணத்தில் அவர் உதவி புரியவில்லை என்ற பொய்  பிரசாரம் வேறு...அன்று கொத்து கொத்தாக என் இன மக்கள் கொன்று குவிக்கப்பட்ட பொழுது ஏளனம் செய்த ஜெயா இன்று தமிழ் மக்களின் காவலர் என்று கூறுவது நினைத்தாள்.......
பாவம் கலைஞர் இப்படிப்பட்ட பழிக்கு பிறகும் தளராது தமிழ் பனி ஆற்றுகிறார்.


எது இன உணர்வு என் இன இளைஞர்களின் மனதில் வெறி ஏற்றுவதா? அல்லது போராட அலைபதா? உண்மை இன உணர்வு எது வென்றால் இளைஞர்களுக்கு கல்வி கொடுங்கள், தொழில் வாய்ப்புக்களை பெருக்கி கொடுங்கள், இன மக்களை பசி இல்லாமல் வாழ வழி செய்யுங்கள், இனத்தை தலை நிமிர செய்வதே இன உணர்வு. இன மக்களை அணைத்து துறைகளிலும் முன்னேற வைப்பதே இன முன்னேற்றம். அன்றே தமிழன் தலை நிமிர்து வாழ முடியும். ஐயன் வள்ளுவனை உலகம் எண்ணி பெருமை கொள்வது ஏன்? அதுவே தமிழனுக்கு பெருமை.சிங்களவன் என்ன அனைவரும் நம்மை மதிப்பான் நாம் நினைப்பது நம் கைக்கு கிட்டும்...உதாரணம் ஜப்பானை பாருங்கள் தெற்காசிய தலைநகரமாக உருபெட்ட்ரத்தை எண்ணி பாருங்கள். என்று இந்த வெள்ளாடு தோல் போர்த்திய இன இரத்தம் குடிக்கும் சென்நாய்கலை நாம் அடையாளம் கண்டு புறந்தல்லுகிரோமோ அன்றே சமூகம் முன்னேற்றம் பெறும்.


அந்த வெறியாட்டத்தின் விளைவு இன்று தமிழகத்தை கன்னடத்து ஜெயா ஆட்சி செய்ய அனுமதிருப்பது தெலுங்கவனை எதிர்க்கட்சி தலைவன் ஆக்கி இருப்பது அவர்களிடம் இன உதவி கேட்பது குச்சியை கொடுத்து அடி வாங்க காத்திருப்பது போன்றது. பிறர் வாழ தமிழன் தன்னை அழித்து கொண்டது போதும் உதாரணம் ரஜினி நலம் பெற 1008 தமிழர்கள் மொட்டை அவரோ மராட்டியம் சென்று பால் தக்கரே இடம் நீ என் கடவுள் என்று தன் இன உணர்வை வெளிபடுத்துகிறார்.


இன்றைய இளைய சமூகம் சீமான் போன்றவர்களை தனிமை படுத்தி வாழ வழி தேடி இனத்தை முன்னேற்ற பாதை நோக்கி வழி நடத்தி செல்லுங்கள். அரசியல் சூழ்ச்சியில் வாழ்வை தொலைத்து பேரறிவாளன் தாய் போன்றதொரு நிலையை உங்கள் தாய்க்கு கொடுகதீர்கள்....சுயநலம் பிடித்த இந்த மிருகங்கள் தங்கள் வாழ்வில் நல்ல நிலையில் தான் இருந்து கொண்டு தங்கள் புகழுக்காக உங்களை சீரழிகின்றனர்....உணருங்கள் முன்னேறுங்கள் அதுவே சமூக முன்னேற்றம்


தமிழன் என்று சொல்லடா .....தலை நிமிர்ந்து நில்லடா....போன்ற தலைமுறையை உருவாக்குவது நம் பொறுப்பு...

5 comments:

Anonymous said...

unami padhivu....excellent

kannan said...

superrrr....

kannan said...

really super..

சாந்திபாபு said...

கலைஞர் ஆட்சியில் இருக்கும்போதுதான் பொதுக் கூட்டம் போட முடிகிறது, பேரணி நடத்த முடிகிறது, போராட்டங்களை நடத்த முடிகிறது என்பதை நன்கு தெரிந்திருந்தும் ஜெயலலிதாவைப் போற்றுவதும், கலைஞரைத் தூற்றுவதும் அறிவார்ந்த செயல் தானா?
உண்மையிலே ஈழத் தமிழர்கள்மீது அக்கறை யிருந்தால் விரோதியை நண்பராகவும் நண்பரை
விரோதியாகவும் கருதுவார்களா?
இதன் மூலம் என்ன தெரிகிறது? ஜெயலலிதா ஆட்சியில் இருந்தால் விடுதலைப்புலிகளைப் பற்றிப் பேச முடியாது. கலைஞர் ஆட்சியில் இருந்தால் பேச முடிகிறது. இதற்குப் பிறகும் ஜெயலலிதாவுக்கு ஜெ போடுவோரை என்னவென்று கூறுவது?

உன்னை போல் ஒருவன் said...

மிக அருமை நண்பரே.. ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டிய உண்மை. ஆடு தோல் போர்த்திய சென்நாய் கூட்டத்தை நன்றாக துயில் உறிதீர்கள். என்னுடைய வாழ்த்துகள் ..