Saturday, August 20, 2011

தமிழ் இன உணர்வும்......இரத்தம் குடிக்கும் சென்நாய்களும்

பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு ஊர்ஜிதம்...அரசியல் போராட்டம். ஒரு தமிழனாய் ஒரு தமிழன் தண்டிக்கபடுவதை விரும்பாத அதே வேலையில் நம் மனதில் சில நினைவுகள் போராடுவது சரியா என மனசாட்சி வாட்டுகிறது......


ஆம் இன்று பேரறிவாளன் தாய் விடும் கண்ணீரை எண்ணி மனம் வருந்தும் வேளையில் ராஜீவுடன் அன்று மரணித்த 18 தமிழ் உயிர்களை உறவுகளின் தாயார் கண்ணீரை ஏன் நம்மால் என்றும் நினைக்க முடியவில்லை..? அவர்களை பெற்றவர்களும் தாய் தானே...அவர்களை கொன்றதும் தமிழ் இனம் தானே...? மறுக்க முடியுமா ?
இதோ விடை வெகு நீளமாக.....ஆம் அன்று பேரறிவாளன் அவர்களுக்கு வயது 19 பாட்டரி வாங்கி கொடுக்கும் போது அவர் மனதில் உயிர்களை காவு வாங்க வெறியேற்ற பட்ட பொழுது. அது அரசியல் சூழ்ச்சி  அதே வெறியை இன்று சீமான் போன்றோர் எண்ணற்ற தமிழ் இளைஞர்களின் மனிதில் ஏற்றுகின்றனர்...ஆம் இந்திய நமது நாடு அல்ல....இந்திய அரசாங்கம் தமிழ் விரோத அரசாங்கம் என்று....அப்படியானால் இந்திய அரசாங்கம் தமிழகத்திற்கு இவ்வாண்டு வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியது ஏன்? ஆம் ஒரு பேரறிவாளனின் தாய் படும் துயர் நெஞ்சை வருடும் போது எண்ணற்ற பேரறிவாளன்கலை உருவாக்க துடிக்கும் இந்த அரசியல் சூழ்ச்சியர்களை இளைஞர் சமூகம் புறந்தள்ளி முன்னேற்ற பாதை நோக்கி செல்ல மனம் வேண்டுகிறது.


ஈழ விடுதலை போரில் ஒன்றும் செய்யாமல் இன்று தடி எடுத்தவன் தண்டல்காரன் போல் செயல்படுவது வேதனையுளும் வேதனை ஆம் சீமான், வைகோ , அய்யா பழ நெடுமாறன் போன்றோர் இன உணர்வை வெளிபடுத்த ஏன் அன்று இன உணர்வாளர்களை  திரட்டி கடல் மார்கமாக ஈழம் நோக்கி சென்று போர்களத்தில் சிங்களவனை எதிர்த்து போரிடவில்லை அப்படி அவர்கள் சென்றிருந்தால் உண்மை இன உணர்வின் பலன் என்ன என்பதை உலகம் அறிந்திருக்கும் அது தான் இன போர். அவர்கள் யாரும் அவ்வாறு செல்லவில்லை ஏன் என்றால் சுயநலம்..தான் எனது என்ற மனம்.....புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கள் மூலைகளை பிற நாட்டு குடிஉரிமை பெற குறுக்கு வழியில் செலவிட்டதை இனத்திற்காக செயல் படுத்தி இருந்தால் ஈழம் மலர்ந்திருக்கும். இது கடுகு அளவு இன்னும் பல கூற்றுகள் உள்ளன. இவர்கள் தங்கள் சுயநல அரசியல் புரிந்ததால் இழப்பு ஒன்றரை லட்சம் என் இனத்தவர்களை சிங்களவன் சூறையாடினான். இன்று புயல் ஓய்ந்தவுடன்     காளான் போன்ற தலைவர்கள் என கூறிகொள்ளும் இவர்கள் சமூக சீரளிவிற்காக எடுத்துள்ள ஆயுதம் இன்றைய இளைய சமூகத்தை பாழ்ஆக்குவது இன உணர்வு என்ற பெயரால்.இதற்க்கு அவர்கள் செய்வது பழுத்த மரத்தில் கல் எறிவது போன்று திமுக மற்றும் தமிழ் இன மூத்த தலைவர் கலைஞர் மீது குறை, பழி சுமித்தி அரசியல் வாழ்வு தேடுவது, தங்கள் தவறை மறைக்க கூறும் நாடகம் இது.  அன்று
1991 ஆம் ஆண்டு ஆட்சி கலைகபட்டதும் ஏன் இந்த இன உணர்வாளர்கள் அவரை மீண்டும் ஆட்சியில் அமர்த்தவில்லை அன்று எங்கே போனது இந்த வெறி...இன்று எதிர்ப்பதும் இன உணர்வு என்ற கோணத்தில் அவர் உதவி புரியவில்லை என்ற பொய்  பிரசாரம் வேறு...அன்று கொத்து கொத்தாக என் இன மக்கள் கொன்று குவிக்கப்பட்ட பொழுது ஏளனம் செய்த ஜெயா இன்று தமிழ் மக்களின் காவலர் என்று கூறுவது நினைத்தாள்.......
பாவம் கலைஞர் இப்படிப்பட்ட பழிக்கு பிறகும் தளராது தமிழ் பனி ஆற்றுகிறார்.


எது இன உணர்வு என் இன இளைஞர்களின் மனதில் வெறி ஏற்றுவதா? அல்லது போராட அலைபதா? உண்மை இன உணர்வு எது வென்றால் இளைஞர்களுக்கு கல்வி கொடுங்கள், தொழில் வாய்ப்புக்களை பெருக்கி கொடுங்கள், இன மக்களை பசி இல்லாமல் வாழ வழி செய்யுங்கள், இனத்தை தலை நிமிர செய்வதே இன உணர்வு. இன மக்களை அணைத்து துறைகளிலும் முன்னேற வைப்பதே இன முன்னேற்றம். அன்றே தமிழன் தலை நிமிர்து வாழ முடியும். ஐயன் வள்ளுவனை உலகம் எண்ணி பெருமை கொள்வது ஏன்? அதுவே தமிழனுக்கு பெருமை.சிங்களவன் என்ன அனைவரும் நம்மை மதிப்பான் நாம் நினைப்பது நம் கைக்கு கிட்டும்...உதாரணம் ஜப்பானை பாருங்கள் தெற்காசிய தலைநகரமாக உருபெட்ட்ரத்தை எண்ணி பாருங்கள். என்று இந்த வெள்ளாடு தோல் போர்த்திய இன இரத்தம் குடிக்கும் சென்நாய்கலை நாம் அடையாளம் கண்டு புறந்தல்லுகிரோமோ அன்றே சமூகம் முன்னேற்றம் பெறும்.


அந்த வெறியாட்டத்தின் விளைவு இன்று தமிழகத்தை கன்னடத்து ஜெயா ஆட்சி செய்ய அனுமதிருப்பது தெலுங்கவனை எதிர்க்கட்சி தலைவன் ஆக்கி இருப்பது அவர்களிடம் இன உதவி கேட்பது குச்சியை கொடுத்து அடி வாங்க காத்திருப்பது போன்றது. பிறர் வாழ தமிழன் தன்னை அழித்து கொண்டது போதும் உதாரணம் ரஜினி நலம் பெற 1008 தமிழர்கள் மொட்டை அவரோ மராட்டியம் சென்று பால் தக்கரே இடம் நீ என் கடவுள் என்று தன் இன உணர்வை வெளிபடுத்துகிறார்.


இன்றைய இளைய சமூகம் சீமான் போன்றவர்களை தனிமை படுத்தி வாழ வழி தேடி இனத்தை முன்னேற்ற பாதை நோக்கி வழி நடத்தி செல்லுங்கள். அரசியல் சூழ்ச்சியில் வாழ்வை தொலைத்து பேரறிவாளன் தாய் போன்றதொரு நிலையை உங்கள் தாய்க்கு கொடுகதீர்கள்....சுயநலம் பிடித்த இந்த மிருகங்கள் தங்கள் வாழ்வில் நல்ல நிலையில் தான் இருந்து கொண்டு தங்கள் புகழுக்காக உங்களை சீரழிகின்றனர்....உணருங்கள் முன்னேறுங்கள் அதுவே சமூக முன்னேற்றம்


தமிழன் என்று சொல்லடா .....தலை நிமிர்ந்து நில்லடா....போன்ற தலைமுறையை உருவாக்குவது நம் பொறுப்பு...

Thursday, August 18, 2011

ஆரம்பமே...ஆறாயிரம் கோடி.....அறுபது நாள் சாதனை.

  1. சமச்சீர் கல்வி வழக்கு நடக்கும் போது பழைய பாட புத்தகம் அடித்த செலவு 200 கோடி...
  2. சமச்சீர் புத்தகங்களில் ஐயன் திருவள்ளுவர் படம் மறைக்க ஆன செலவு 60 லட்சம்.(ஒன்று மற்றும் ஆறாம் வகுபிற்கு மட்டும்)
  3. சமச்சீர் கல்வி வழக்கில் மேல்முறைஈடு வகையில் தண்ட செலவு 1 கோடி.
  4. மேலும் எட்டு வகுப்புகளுக்கு அகபோகும் செலவு 4 .8 கோடி.
  5. புனித ஜார்ஜ் கோட்டை புதுப்பித்த செலவு 60 கோடி.
  6. கலைஞர் அவர்களால் திறம்பட கட்ட பெற்ற தலைமை செயலகம் பயன்படுத்தாமல் வீனடிகபட்ட நஷ்டம் 1200 கோடி
  7. எதிர்கட்சிகள் மீது பொய் வழக்கு போட ஜெயா காவல்துறை ஒவ்வொரு கைது செலவு (ஒரு நபர் 50 ,௦௦௦) 5 கோடி +
  8. மெட்ரோ ரயில் திட்டத்தை நிறுத்தி மோனோ ரயில் வகையில் ஜெயா அவர்கள் வீணடிப்பு 4500 கோடி
  9. ஜெயா அவர்கள் ஹெலிகாப்ட்டர் மற்றும் தனி விமான பயணம் வீணடிப்பு 3 கோடி
சாமான்யனுக்கு தெரிந்த வகையில் ஆன வீணடிப்பு இது அதாவது நம் வரிப்பணம் 5975 கோடி வீணடிக்க பட்டுள்ளது முழுமையாக உன்னித்து கவினித்தால் இன்னும் கூடும். 100 கோடி ரூபாய் நஷ்டம் கொடுத்த டெல்லி முதல்வர் ஷீலா திட்சித், 25 கோடி இழப்பு ஏற்படுத்திய அவர்களை ராஜினாமா செய்ய சொல்லி கடும் போராட்டம் (பாஜக, கம்யு கட்சிகள் .....), அண்டை மாநிலதில் எடியுரப்ப ராஜினாமா. இந்த செய்திகளை பெரிதாக வெளிஇடும் ஊடகங்கள் இதை கண்டு கொள்ளாததில் இருந்த தெரிந்து கொள்ளுங்கள் நாட்டில் கலைஞர் கூறியது தான் நடைபெறுகிறது ஆம் ஆதிக்க வெறியாட்டம். 5975 கோடி வீணடிப்பு இரண்டு மாத சாதனை இன்னும் தொடர்ந்தால் நிலை என்ன...? இதன் விளைவு 4000 கோடி வரி உயர்வு , 18000 கோடி கடன் அதற்க்கு விளக்கம் கடன் அளவில் தமிழ்நாடு மத்திய அரசு நிர்ணைஈத அளவில் உள்ளது என்று(இதுவே கலைஞர் அரசின் நிர்வாக திறன் காரணமாகத்தான் இவர்கள் ஆட்சி பொறுப்பு ஏற்ற இரண்டே மாதத்தில் 18000 கோடி கடன் பெற முடிந்தது).
பொய்யை அடித்து கூறியவர்களிடம் உண்மையை உரக்க சொல்லுங்கள்...அனைவரும் தவறாது தங்கள் இணையத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சீமானின் சிறுபிள்ளை அரசியல்....

செய்தி
சமீபத்தில் சென்னை மெரினா கடற்கரை மற்றும் தமிழகம் எங்கும் ஒரு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது அதில் இலங்கை பொருள்களை தவிர்ப்போம் என்று முழங்கப்பட்டது....


இலங்கைக்கு பொருளாதார தடை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதை பாராட்டி ஜெயாவுக்கு சென்னையில் விழா மற்றும் வேலு நாச்சியார் என்ற பட்டமும் வழங்க பட்டது


சென்னைக்கு புத்த மத ஆன்மிக சுற்றுலா வந்த சிங்கள மக்களை அடித்து துன்புருத்திய செயல்


உண்மையில் நடப்பது........


ஆனால் உண்மையில் நடப்பது என்ன வென்றால் தூத்துக்குடி வழியாக சரக்கு சிங்களனுக்கு தோணி மூலமும்,கப்பல் மூலமும் கொழும்பு சிங்களவனுக்கு பொருள்களை அனுப்பி வைப்பது நாம் தமிழர் இயக்க நிர்வாகிகளே.


அவ்வாறு அனுப்பும் சில பொருள்களுக்கு சிங்கள எழுத்து பொறித்த பைகளில் தான் அவை அனுப்ப படுகிறது.


அவ்வாறு போராட்டத்தில் பங்கு பெற்ற புலம் பெயர்ந்த தமிழர்கள் இறக்குமதி செய்து பயன் படுத்துவது சிங்களன் தயாரித்த பொருள்களை தான்.


அவர்கள் இலங்கைக்கு பயணிப்பது இலங்கை அரசுக்கு சொந்தமான சிங்களன் விமானத்தில் தான்.


செய்தி


சீமான் திருமணம் செய்வது என்றால் போரினால் பாதிக்கபெற்ற ஈழத்து பெண்ணை


உண்மை......


கற்பழித்ததோ விஜயலட்சுமி என்னும் பெண்ணை நீதி கிடைக்காமல் தினம் தினம் கண்ணீர் சிந்தும் அபலை....


தன் திரைபடத்தில் சம்பாரிக்க நடிக்க வைத்தது சிங்கள பெண்ணை பெயர் பூஜா படம் தம்பி.....


செய்தி


சீமான் முதல் முறையாக ஜெயா சந்திக்கிறார் கோட்டையில்...... ஈழத்து மக்கள் பிரச்னை தீர்வு காண போகிறார் என்ற ஆவல்...


உண்மை.....


வெளியில் வந்து விஜயலட்சுமி கொடுத்த புகாரை தைரியமாக சந்திப்பேன் என்று நிருபர்களிடம்....


செய்தி


மார்க்சிஸ்ட் போராட்டம்....... ஈழத்தில் தமிழர்களுக்கு சமஉரிமை ....நாம் தமிழர் இயக்கம் கண்டனம் கம்யூனிஸ்ட்க்கு --தனி ஈழம் ஒன்றே தீர்வு.


உண்மை.....


சட்டசபையில் ஜெயா இன்று 11 08 2011 தமிழர்களுக்கு சமஉரிமை கிடைக்கும் வரை இந்த அரசு ஓயாது---நாம் தமிழர் இயக்கம் ஜெயலலிதாவுக்கு பாராட்டு


சீமானுக்கு கொட்டாவி வந்த கூட அது திமுக செய்த சதி என்று உரக்க கூறி இளைஞர்களிடம் வெறி ஏத்துகிறார்...என் உறவுகளே என்ற பொய்ஆன வசனம் வேறு


தான் வளர திமுக மீது அப்பட்ட பழி சுமத்தி வாழ்வு தேடும் சீமான் ஒரு அற்பனே.....இவ்வளவு பேசும் சீமானே உன்னிடம் ஒரே ஒரு கேள்வி.....ஈழ போரின் போது நீ ஏன் உன் நாம் தமிழர் உறவுகளை அழைத்துக்கொண்டு கடல் மார்கமாக சென்று போர்முனை நின்று போர் புரியவில்லை? ஏன் என்றால் நீ ஒரு சுயநலவாதி. உன் தவறை மறைக்க, உன் அரசியல் வாழ்கைக்காக திமுக வை சாடி கொண்டே பிழைக்கலாம் என்று எண்ணுகின்றாய்.


நீ ஒரு ஊன்மை தமிழன் என்றால் இங்கு ஒரு தமிழனை அழித்து ஒரு கன்னடத்து சிங்காரிக்கு மற்றும் தெலுங்கு குடிகாரனுக்கும் துணை போவதில் இருந்தே தெரியவில்லையா உன் தமிழ் பற்று என்ன என்று.


உன் அற்ப வாழ்கைக்காக இன்று தமிழக இளைங்கர்களை தமிழ் உணர்வு பால் என்னும் உன் பொய் முகத்தை கொண்டு வெறி ஏற்றி இங்கு இந்திய அரசாங்கத்துக்கு எதிராக பிரசாரம் செய்வதுடன் தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து பிரிக்க நினைக்கும் உன் செயல் என்றும் நிறைவேறாது.....மூடனே. (இது அதிர்ச்சி தரும் உண்மை தான் நண்பர்களே நாம் தமிழர் இயக்கத்தினரிடம் நான் வாதாடிய போது அவர்கள் என்னிடம் கூறியது கேட்டு கொதிதேன்) காரணம் கேட்டால் இந்தியாவினால் தமிழகத்துக்கு என்ன பலன் என்று எதிர் கேள்வி வேறு.....என்னை தேச துரோகி என்று இவர்கள் கூறுகிறார்கள். அவர்களது செயல்பாடுகளை கூர்ந்து கவனியுங்கள் நண்பர்களே...


கலைஞர் இலங்கை போரின் போது பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மூன்று கப்பல் மூலம் 35 கோடி ரூபாய் நிவாரண பொருள்களை அனுப்பினார்..போரினால் பதிக்கப்பட்ட மக்களை எண்ணி நாளும் துடித்தார்.. எண்ணிலடங்க முயற்சி எடுத்தார்...இலங்கை தமிழர்க்காக....


தமிழர்கள் ஒன்றுபட்டு நிம்மதியாக வாழ வேண்டும் என்பது தான் நம் கழக நிலைப்பாடு, மேலும் ஈழத்தமிழர்கள் மீளாதுயரம் நம் கண்களில் குருதி பாய்ச்சுவது என்னவோ மறுக்க முடியாத உண்மை, அதை சீமான் போன்றோர் தன் சுய லாபதிருக்கு நம் இளைய சமுதாயத்தை தமிழ் இன உணர்வாளன் போன்ற பொய் தோற்றம் தந்து தவறான பாதைக்கு அழைத்து செல்வது மாபெரும் வேதனை. நம் இளஞ்சமுகத்தை கழகத்தின் வாயிலாக நல்வழிக்கு அழைத்து செல்ல வேண்டும் நண்பர்களே......